வேளாண் இணை இயக்குனர் ஆலோசனை: வேதாரண்யத்தில் புதிய வேளாண் காடு வளர்ப்பு திட்டத்தில் பங்குபெற அழைப்பு

வேதாரண்யம், டிச.2: வேதாரண்யம் பகுதி விவசாயிகள் புதிய வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தில் பங்குபெற வேதாரண்யம் வட்டார விவசாயிகளுக்கு வேதாரண்யம் வேளாண்மை உதவி இயக்குனர் நவீன் குமார் அழைப்பு விடுத்துள்ளார். வேதாரண்யம் பகுதி விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் தேக்கு, ரோஸ்வுட், மகோகனி, மருது, வேங்கை, மலைவேம்பு, சந்தனம், செம்மரம் போன்ற பல்வேறு வகையான மரக்கன்றுகள் தரமான நிலையில் விவசாயிகளுக்கு முற்றிலும் முழு மானியத்துடன் இலவசமாக வழங்கப்படும்.

இந்த மரக்கன்றுகள் விவசாயிகள் தங்கள் நிலங்களில் வரப்பு வழியிலோ அல்லது குறைந்த செலவில் விவசாய நிலங்களில் நடவு செய்ய இயலும் வரப்பில் நடுவதாக இருந்தால் ஏக்கருக்கு அதிகபட்சமாக 50 மரக்கன்றுகளும், விவசாய நிலங்களில் நடவு செய்ய அதிகபட்சமாக 160 மரக்கன்றுகளும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். நட்ட மரக் கன்றுகளை பராமரிக்க மரக்கன்றுக்கு ரூ.7 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். இவ்வாறு வளர்க்கப்படும் மரங்கள் நிலத்தின் தன்மையை வளப்படுத்தி விவசாய நிலங்களில் பயிரிடப்படும் பயிர்களில் அதிக மகசூல் பெற வழிவகை செய்கிறது.

20 முதல் 30 ஆண்டுகளுக்கு பிறகு நல்ல வருவாயை விவசாயிகள் பெறலாம். மேலும் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்திலும் உழவன் செயலி மூலம் பதிவு செய்து, இத்திட்டத்தில் பயன்பெறுமாறு விவசாயிகளுக்கு வேதாரண்யம் வேளாண்மை உதவி இயக்குனர் நவீன் குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories: