சீர்காழி சமுஇ மேல்நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர், எஸ்பி நேரில் ஆய்வு

சீர்காழி, டிச.2:சீர்காழி சமுஇ மேல்நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர், எஸ்பி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். தமிழகத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்த தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் சேர்க்கை போன்ற பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சீர்காழி நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளில் தேர்தல் நடைபெற்றால் 24 வார்டுகளில் பதிவாகும் வாக்குகள் சீர்காழி ஊழியக்காரன் தோப்பில் அமைந்துள்ள ச.மு.இ மேல்நிலைப்பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் நாளில் எண்ணப்படுவது வழக்கம்.

விரைவில் நடைபெற உள்ள நகராட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் சீர்காழி சமுஇ மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்படவுள்ள வாக்கு எண்ணும் மையம் வாக்குப் பெட்டிகள் வைக்கும் அறை ஆகியவற்றை மயிலாடுதுறை கலெக்டர் லலிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்பு நகராட்சி அதிகாரிகளிடம் வாக்குபெட்டிகள் வைக்கும் அறை மற்றும் எண்ணும் மையத்தில் பாதுகாப்பு அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது சீர்காழி டிஎஸ்பி லாமேக் நகராட்சி ஆணையர் பட்டுசாமி, நகராட்சி மேலாளர் காதர்கான், நகரமைப்பு ஆய்வாளர் நாகராஜன், பணி மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதேபோல் சீர்காழி சமுஇ வாக்கு எண்ணும் மையம் வாக்குப் பெட்டிகள் வைக்கும் அறை ஆகியவற்றை மயிலாடுதுறை எஸ்.பி. சுகுணாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது எஸ்பி தனிப்பிரிவு காவலர் முத்துக்குமார், தலைமையாசிரியர் அறிவுடைநம்பி உடனிருந்தனர்.

Related Stories: