அர்த்தநாரீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரி திறப்பு

திருச்செங்கோடு, டிச.2: இந்துசமய அறநிலையத்துறை சார்பில், திருச்செங்கோட்டில் சுயநிதி கலை அறிவியல் கல்லூரியை முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று சென்னையில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

திருச்செங்கோடு மண்கரட்டு மேட்டில் அமைந்துள்ள அர்த்தநாரீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடந்த திறப்பு விழா நிகழ்ச்சிக்கு, கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்தார்.

சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்எல்ஏ ஈஸ்வரன், மாவட்ட செயலாளர் கே.எஸ். மூர்த்தி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மங்கையர்கரசி முன்னிலை வகித்தனர். கோயில் செயல் அலுவலர் சரவணன் வரவேற்றார். இதில் நகர திமுக பொறுப்பாளர் கார்த்திகேயன், ஒன்றிய செயலாளர் தங்கவேலு, மாவட்ட துணை செயலாளர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், தங்கவேல், பழனிவேலு, தனராசு, யூனியன் சேர்மன் சுஜாதா தங்கவேல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More