எருமப்பட்டி அருகே டேங்கர் லாரி மோதி 10 டூவீலர்கள் சேதம்

சேந்தமங்கலம், டிச.2: நாமக்கல்லில் இருந்து திருச்சி மாவட்டம் துறையூருக்கு, டேங்கர் லாரி ஒன்று நேற்று மாலை சென்றது. இந்த லாரியை துறையூரை சேர்ந்த டிரைவர் எழில் (38) என்பவர் ஓட்டிச் சென்றார். எருமப்பட்டி அடுத்த அலங்காநத்தம் பிரிவு என்ற இடத்தில், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி, தறிகெட்டு ஓடி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இருந்த டூவீலர்கள் மீது மோதி நின்றது. இதில் 10 டூவீலர்கள் முழுவதும் சேதமடைந்தது. இதுகுறித்து தகவலறிந்த எருமப்பட்டி போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, விபத்தை ஏற்படுத்திய டேங்கர் லாரி டிரைவர் எழில் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More