புதுச்சத்திரம் ஒன்றிய ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம்

சேந்தமங்கலம், டிச.2: புதுச்சத்திரம் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம், கூட்டமைப்பு தலைவர் கந்தசாமி தலைமையில் மின்னாம்பள்ளியில் நேற்று நடந்தது. துணைத் தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். இதில், ஊராட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டிய எஸ்எப்சி நிதி 3 மாதமாக வழங்கப்படவில்லை. அதனை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும் நிதியை உயர்த்தி வழங்க வேண்டும். குப்பை வண்டிகளை இயக்குவதற்கு நிரந்தர பணியாளர்களை நியமிக்க வேண்டும். ஒவ்வொரு ஊராட்சியிலும், ஊராட்சி செயலருக்கு உதவியாக கணினி உதவியாளரை நியமிக்க வேண்டும். புதுச்சத்திரம் ஒன்றியத்தில், ஏராளமான ஊராட்சி மன்ற அலுவலகங்கள் பழுதடைந்துள்ளது. புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் துணை பிடிஓ திவாகர், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More