தேசிய குவாஷ் போட்டியில் அரசு பள்ளி மாணவன் தங்கம் வென்று சாதனை

நாமக்கல், டிச.2: திருப்பூரில் தேசிய அளவிலான குவாஷ் (தற்காப்பு கலை) போட்டிகள் 2 நாள் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில் படிக்கும் 11 மாணவர்கள் இந்த போட்டியில் கலந்துகொண்டனர். இதில் வளையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ்1 மாணவன் கீர்த்திவாசன் கலந்துகொண்டு  தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்தார். அவரை பள்ளியின் தலைமை ஆசிரியர் சுப்பிரமணி, உடற்கல்வி ஆசிரியர்கள் வீரமலை, கருப்பண்ணன், நந்தினி, சரவணகுமார் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.

Related Stories:

More