உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட காங்கிரசார் விருப்ப மனு

கிருஷ்ணகிரி, டிச.2: கிருஷ்ணகிரியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சியினர் விருப்ப மனு அளித்தனர். கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் உள்ள கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியினர் விருப்ப மனு அளித்தனர். மாவட்ட தலைவர் நடராஜ் மனுக்களை பெற்றார். இதில், மாவட்ட பொதுச்செயலாளர் அப்சல், மாவட்ட துணைத் தலைவர் தளபதி ரகமத்துல்லா தலைமையில், மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்று மாவட்ட செயலாளர் அஜிசுல்லா, ராகுல் பேரவை மாவட்ட தலைவர் குட்டி(எ)விஜயராஜ், இர்பான் உள்ளிட்டோர் விருப்ப மனு அளித்தனர். இதில் டாக்டர் தகி, பன்னீர்செல்வம், ஷானவாஸ், சக்கரவர்த்தி, சித்திக், சரவணன், முபாரக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More