பென்னாகரத்தில் முன்னாள் திமுக எம்எல்ஏ நினைவு நாள் அனுசரிப்பு

பென்னாகரம், டிச.2: தர்மபுரி மாவட்ட முன்னாள் திமுக செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான பெரியண்ணனின் 12ம் ஆண்டு நினைவு நாள், பருவதனஅள்ளியில் உள்ள அவரது நினைவிடத்தில் நேற்று அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அவரது மகனும், மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான இன்பசேகரன் கலந்துகொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி, மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் காளியப்பன், துரைசாமி, ஜிவி மாதையன், சூடப்பட்டி சுப்பிரமணி, மணி, மாதேசன், ராஜகுமாரி, மணிவண்ணன், திருமால்செல்வன், தனேந்திரன், ஏரியூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர்கள் கோபால், குமரவேல், அன்பழகன், நல்லம்பள்ளி சண்முகம், எச்சனஅள்ளி சண்முகம், குட்டி, நகர செயலாளர்கள் வீரமணி, சண்முகம், சீனிவாசன், முரளி, வெங்கடேசன், மாவட்ட பிரதிநிதி சிவகுமார், கவுன்சிலர் கார்த்திக், ஒன்றிய பொருளாளர் மடம் முருகேசன், ஏரியூர் ஒன்றிய கவுன்சிலர் சென்னையன், தாரணி சில்க்ஸ் கமலேசன், சிகரலஅள்ளி தண்டாளன், சுரேஷ், சம்பத்குமார், வினுஅன்பழகன் உள்ளிட்ட நிர்வாகிகள், குடும்பத்தினர் ஜானகி பெரியண்ணன், டாக்டர் ராஜசேகர், தமிழாசிரியர் முனியப்பன், மோகனா முனியப்பன், பெரியண்ணன், மணிமேகலை பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதேபோல், காரிமங்கலத்தில் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் அன்பழகன் தலைமையில் திமுகவினர், பெரியண்ணன் உருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

Related Stories:

More