உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி தன்னார்வ அமைப்பு சார்பில் நலத்திட்ட உதவிகள்

திருப்பூர், டிச.2:  உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி தன்னார்வ அமைப்பான என்.எம்.சி.டி. சார்பில் விழிப்புணர்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. என்.எம்.சி.டி. நிர்வாக அறங்காவலர் சங்கரநாராயணன வரவேற்றார். சுகாதாரத்துறை இணை இயக்குனர் பிரேமலதா, மாநகர போலீஸ் உதவி கமிஷனர் செல்வதங்கம் ஆகியோர் வாழ்த்தினர். திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: இந்த நிகழ்ச்சிக்கு ஜெர்மனியை சேர்ந்த ஒரு பெண்மணி 85 சதவீதம் உதவி செய்வதாக தெரிவித்தார். அந்த அன்பு உள்ளம் கொண்ட சகோதரிக்கு, இந்தியாவின் நம்பர் ஒன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நோயால் ஒரு மனிதன் துன்பப்படும்போது, மருத்துவ செலவுக்கு பணம் இல்லை என்றால், அவன் மனம் எவ்வளவு வேதனை அடையும் எனபது அனைவருக்கும் தெரியும். எங்கேயோ பிறந்து, இந்த தமிழ் மண்ணுக்காக 85 சதவீதம் உதவியை செய்வது எவ்வளவு பெரிய விஷயம். நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் என ஒவ்வொரு மனிதரும் ஆசைபடுவார்கள். ஒவ்வொருவரும் ஒழுக்கத்தோடு வாழ்ந்தாலே நீண்ட காலம் வாழலாம். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து 7 பயனாளிகளுக்கு தலா ரூ.30 ஆயிரம் நிதியுதவி, 6 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Related Stories: