9வது வார்டில் அடிப்படை வசதிகள் கேட்டு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள், பெண்கள் மனு

திருமுருகன்பூண்டி, டிச.2:  திருப்பூர் மாநகராட்சி,  9வது வார்டு கிளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் புஷ்பலதா தலைமையில் அப்பகுதி மக்கள் 1வது மண்டல  அலுவலகத்திற்கு வந்து  உதவி பொறியாளரிடம் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகராட்சி,  9வது வார்டு பகுதியில்  சாக்கடை கால்வாய், மற்றும் தேங்கும் குப்பைகளை  சுத்தம் செய்து அந்த இடத்தில் சரிவர மருந்து தெளிக்க வேண்டும். 25 நாட்களுக்கு ஒருமுறை விநியோகம் செய்யப்படும்  குடிநீரை வாரத்திற்கு 2 முறை வழங்க வேண்டும். பொதுக்குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. தினமும் தண்ணீர் விட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மழைநீர் ரோடுகளில் தேங்கி நிற்கிறது. அதனை மண் கொட்டி சரிசெய்து தரவேண்டும். பழுதடைந்த தெருவிளக்குகளை மாற்றி தரவேண்டும் உள்பட  பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அப்போது கட்சியின் முன்னாள் கவுன்சிலர்கள் பி.ஆர் நடராசன்,  எஸ்.செல்வராஜ், பி, நடராசன், எஸ்.ஆர் கருப்புசாமி, உதயகுமார், மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

More