57 பேருக்கு கொரோனா

திருப்பூர், டிச.2:  திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 57 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிப்பு  எண்ணிக்கை தற்போது 97 ஆயிரத்து 230 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 57 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆயிரத்து 621 ஆக உள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 609 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருப்பூரை சேர்ந்த 70 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்துள்ளது.

Related Stories:

More