நீர், மண் பரிசோதனைகள்; விவசாயிகளுக்கு அழைப்பு

ஈரோடு, டிச.2: நீர் மற்றும் மண்ணின் தன்மை அறிந்து விவசாயிகள் அதற்கு ஏற்ப உரமிட வேண்டும் என்று வேளாண் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சின்னசாமி கூறியதாவது: மண் பரிசோதனை செய்வதன் மூலம் மண்ணின் தன்மை, அதில் உள்ள ஊட்டச்சத்துக்களை அறியலாம். மண்ணுக்கு பொருத்தமான பயிர்களை தேர்வு செய்து சாகுபடி செய்யலாம். மண் பரிசோதனை மூலம் பரிந்துரைக்கப்படும் உரத்தை மட்டும் இடுவதால், உரச்செலவு குறையும். மண்ணரிப்பு, கசிவின் மூலம் வயலை விட்டு அதிக உரங்கள் வெளியேறுவது தடுக்கப்படும். மண், காற்று மாசுபாடு தவிர்க்கலாம். மண் வளம் அதிகரித்து, உற்பத்தி திறன் அதிகமாகி, லாபம் பெற முடியும். இதே போல விவசாயிகள், விளை நிலத்துக்கு பயன்படுத்தும் நீரின் தன்மை பரிசோதனை நிலையத்தில் ரூ.20 கட்டணம் செலுத்தி அறியலாம். இது தொடர்பாக விவசாயிகள் அந்தந்த பகுதி வேளாண் விரிவாக்க மையங்களை அணுகி உரிய விபரங்களை கேட்டுத்தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: