சென்னை குடிநீர் ஏரிகளில் இருந்து 24வது நாளாக உபரிநீர் வெளியேற்றம்: நீர்வளத்துறை அதிகாரி தகவல்

சென்னை: கடந்த 6ம் தேதி முதல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், கண்ணன் கோட்டை-தேர்வாய் கண்டிகை ஆகிய 5  ஏரிகளுக்கு நீர்வரத்து இருந்தது. இதனால், கடந்த 7ம் தேதி முதல் இந்த 5 ஏரிகளில் இருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் நீர்வரத்து இருப்பதால் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.

21.02 அடி கொண்ட புழல் ஏரியில் 19.42 அடி உள்ளது. 18.86 அடி கொண்ட சோழவரம் ஏரியில் 16.95 அடி உள்ளது. 35 அடி கொண்ட பூண்டி ஏரியில் 34.12 அடி உள்ளது. 24 அடி கொண்ட செம்பரம்பாக்கத்தில் 22.10 அடி உள்ளது. 36.61 அடி கொண்ட கண்ணன் கோட்டையில் 36.61 அடி உள்ளது. தொடர்ந்து, அடுத்து வரும் நாட்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், 3 அடி வரை நீர் இருப்பு குறைத்து வைக்கப்படுகிறது. ஆனாலும் தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் உபரி நீராக  வெளியேற்றப்பட்டு வருகிறது. முதன்முறையாக ஏரிகளில் இருந்து உபரிநீர் 24வது நாளாக வெளியேற்றப்படுகிறது என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.   

Related Stories: