சுயதொழில் தொடங்க விருப்பம் உள்ள பட்டியல் மற்றும் பழங்குடியினத்தவர்கள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அறிவிப்பு

சென்னை: சுயதொழில் தொடங்க விருப்பம் உள்ள பட்டியல் மற்றும் பழங்குடியினத்தவர்கள், தாட்கோ திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயாராணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை மாவட்டத்தில் வசிக்கும் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினத்தவர் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம் உள்ளிட்ட பொருளாதார மேம்பாட்டு திட்டங்களில் பயனடைய தாட்கோ இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 18 முதல் 65 வயது வரை உள்ளவர்கள் மற்றும் குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு 2 லட்சம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பட்டியல் இனத்தவராக இருப்பின் //application.tahdco.com பழங்குடியினராக இருப்பின் //fast.tahdco.com என்ற தாட்கோ இணையதள முகவரியில், குடும்ப அட்டை அல்லது இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை உள்ளிட்ட 11 ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பங்களை 24 மணி நேரமும் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட மேலாளர், தாட்கோ அலுவலகத்தை அணுகலாம். அல்லது 044-25246344, 9445029456 போன்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்லது.

Related Stories: