கடல்நீரை குடிநீராக சுத்திகரிக்கும் 3வது ஆலை அமைக்க மண் பரிசோதனை

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையொட்டி, சூளேரிக்காடு கிராமத்தில் கடந்த 2013ம் ஆண்டு முதல் இயங்குகிறது. இங்கு, தினமும் 10 கோடி லிட்டர் தண்ணீர் சுத்திகரிப்பு செய்து திருவான்மியூர், ஈஞ்சம்பாக்கம், பெருங்குடி ஆகிய பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அனுப்பப்படுகிறது. மேலும், முதலாவது ஆலைக்கு அருகே ஜெர்மன் நாட்டு நிதியுதவியுடன், 2வது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் கட்டுமான பணி தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணி முடிந்த பின்னர், 15 கோடி லிட்டர் குடிநீர் சுத்திகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், மீனம்பாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், சோழிங்கநல்லூர், ஆலந்தூர், புனித தோமையர் மலை உள்ளிட்ட பகுதிகளுக்கு விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேப்போல், சூளேரிக்காடு அடுத்த பேரூரில் புதிதாக 40 கோடி லிட்டர் கொள்ளளவு கொண்ட 3வது ஆலை அமைய இருக்கிறது. இதற்கான, இடத்தில் மண் உறுதி தன்மை குறித்து சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, மண் பரிசோதனையை துவங்கி உள்ளனர். விரைவில் இதற்கான கட்டுமான பணி துவங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: