விவசாயிகளுக்கு மழைக்கால பாதுகாப்பு: வேளாண் துறை அறிவுரை

திருப்போரூர்: மழைக்காலத்தில் விவசாயிகள் பாதுகாப்பாக கடைப்பிடிக்க வேண்டிய அறிவுரைகள் குறித்து வேளாண் துறை தனது அறிக்கையில் கூறியுள்ளது. இதுகுறித்து திருப்போரூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் ஜெ.ரவீந்திரா வெளியிட்டுள்ள அறிக்ைகயில் கூறியிருப்பதாவது. தற்போது வடகிழக்கு பருவமழையின் காரணமாக வயல்வெளிகளில் நீர் சூழ்ந்துள்ளது. இதனால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, உழவர்கள் வெள்ளநீர் சூழ்ந்துள்ள வயல்களில் உடனடியாக வடிகால்வாய் வசதி ஏற்படுத்தி, தண்ணீரை வெளியேற்றி பயிரின் வேர் பகுதிக்கு காற்றோட்டம் கிடைக்க வழி செய்ய வேண்டும்.

நாற்றுகள் கலைந்து அகற்றப்பட்டு இருந்தால் அந்த இடங்களில் நாற்றுகளை மீண்டும் நட வேண்டும். பாதியளவு நீரில் பயிர்கள் மூழ்கி இருந்தால், தழைச்சத்து பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, 2 கிலோ யூரியா, 1 கிலோ ஜிங்க் சல்பேட், 200 லிட்டர் நீரில் கலந்து ஒரு ஏக்கருக்கு தெளிக்க வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு திருப்போரூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மற்றும் உதவி அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More