கள்ளிக்குடி கிராமத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட பயிற்சி

ஆர்.எஸ்.மங்கலம்,டிச.1: கள்ளிக்குடி கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது. வேளாண்மை துணை இயக்குநர் சேக்அப்துல்லா தலைமை வகித்தார். அவர், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட செயல்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். நெற்பயிருக்கு சமச்சீர் உரநிர்வாக முறைகள் குறித்தும், ஊட்டமேற்றிய தொழுஉரம் குறித்து ஆலோசனை வழங்கினார்.

சூப்பர் பாஸ்பேட் உரத்துடன் தொழு உரத்தை கலந்து நெல் வயலில் அடியுரமாக இடுவதால் பயிருக்கு மணிச்சத்தின் உபயோகம் முழுவதுமாக கிடைக்கிறது. தற்பொழுது நெற்பயிருக்கு இடப்படும் யூரியாவுடன் பொட்டாஸ் உரம் கலந்து இடுவதன் மூலம் பூச்சி நோய் தாக்குதலில் இருந்து பயிரை பாதுகாக்கலாம் என்றார்.

நெற்பயிரில் குலைநோயைக் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு டிரைசைக்ளோசோல் 75 WP 200 கிராம் அல்லது அசோக்சிஸ்ட்ராபின் 23 எஎஸ்.சி 200 மி.லி மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு மாலைநேரத்தில் தெளிக்க வேண்டும். என வேளாண்மை உதவி இயக்குநர் ராஜலெட்சுமி கூறினார்.

 செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள் நாகராசு எடுத்துரைத்தார். வேளாண்மை பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்களான வேளாண் வாடகை இயந்திரங்கள் விநியோகம் மற்றும் பண்ணைக்குட்டை வெட்டுதல், சோலார் பம்பு செட்டுகள், சோலார் போர்வெல் 70 சதவீதம் மானியத்துடன் விவசாயிகளுக்கு அமைத்து தருதல் குறித்து உதவி செயற்பொறியாளர் தமிம் அன்சாரி விளக்கிக் கூறினார். உளுந்து பயிரியில் விதை நேர்த்தி செய்வது குறித்து உதவி தொழில்நுட்ப மேலாளர் பாலாஜி செயல்விளக்கம் செய்து காண்பித்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் அன்னலெட்சுமி நன்றி கூறினார். ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் சொர்ணக்குமார் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் தீபா செய்திருந்தனர்.

Related Stories: