×

திருச்சியில் இன்று மின்தடை

திருச்சி, ஏப்.23: திருச்சி மகாலட்சுமி நகர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9 முதல் மாலை 4 மணி வரை வாஸ்நகர், அகிலாண்டேஸ்வரிநகர், பிச்சை நகர், கோல்டன்நகர், திருச்சி சென்னை பைபாஸ் ரோடு மேற்கு பகுதிகளில் பழைய உயரழுத்த கம்பிகளை அதிக திறனுடைய கம்பிகளாக மாற்றும் பணி நடைபெற உள்ளதால் இப்பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. தில்லைநகர் பகிர்மான வட்டத்தில் மின்பாதைகளில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், தில்லைநகர் வடகிழக்கு விஸ்தரிப்பு, 1 முதல் 5 கிராஸ்கள், இன்று காலை 8 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மின்நியோகம் இருக்காது என தென்னூர் மின்செயற்பொறியாளர் பிரகாசம் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED தொட்டியத்தில் மதுரை காளியம்மனுக்கு வளையல் அலங்காரம்