×

குடியிருப்புகளுக்கு அருகே மது குடித்ததை கண்டித்த வாலிபருக்கு அடி உதை

திருச்சி, ஏப். 23: ரங்கம் பஞ்சக்கரை சுண்ணாம்பு காளவாய் பகுதியை சேர்ந்தவர் வடமலை (35). இவரது வீடு அருகே அமர்ந்து 3 பேர் மது குடித்து கொண்டிருந்தனர். இதனை பார்த்த வடமலை, இங்கு அமர்ந்து மது குடிக்கலாமா என கேட்டு திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் வடமலையை சரமாரியாக தாக்கிவிட்டு ஓடினர். இதுகுறித்த புகாரின்பேரில் ரங்கம் எஸ்ஐ சிவசுப்ரமணியன் வழக்குபதிந்து திருச்சி உறையூர் எழில் நகரை சேர்ந்த நவீன்குமார் (26) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பியோடிய உறையூர் சூரி (எ) சூரியகுமார் (35), புத்தூர் மந்தையை சேர்ந்த கார்த்தி (27) ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED தொட்டியத்தில் மதுரை காளியம்மனுக்கு வளையல் அலங்காரம்