×

திருவெறும்பூர் அருகே உப்பு லோடு லாரி கவிழ்ந்தது


திருவெறும்பூர், ஏப்.23: வேதாரண்யத்தில் இருந்து கல்கத்தாவிற்கு உப்பு பாக்கெட்டுகளை ஏற்றிக்கொண்டு லோடு லாரி சென்றது. கள்ளக்குறிச்சியை சேர்ந்த ராஜு (32) என்பவர் லாரியை ஓட்டினார். நேற்று முன்தினம் இரவு திருவெறும்பூர் அடுத்த காட்டூர் வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி சென்டர் மீடியனில் மோதிய லாரி பக்கவாட்டில் கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பில்லை. தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : Thiruverumbur ,
× RELATED பொன்மலை - திருவெறும்பூர் சுரங்கப்பாதை...