×

சிறுமியிடம் அத்து மீறல் சமையல் மாஸ்டர் கைது

முசிறி, ஏப்.23: முசிறி பெரியார் நகரை சேர்ந்தவர் சிங்காரவேலன் (51). சமையல் மாஸ்டர். இவர் 7 வயது சிறுமியிடம் அத்துமீறி நடந்ததாக கூறப்படுதிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்தனர். ஆனால் சிங்காரவேலன் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் சிங்காரவேலனின் மகன் போலீசாக வேலை பார்ப்பதால், சிங்காரவேலனை போலீசார் கைது செய்யாமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் எஸ்பி மயில்வாகனனிடம் புகார் செய்தனர். இதையடுத்து எஸ்பி தனிப்படை போலீசாருக்கு சமையல் மாஸ்டர் சிங்காரவேலனை கண்டுபிடித்து கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.இந்நிலையில் முசிறி பெரியார் பாலத்தில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே வந்த சிங்காரவேலனை மடக்கி கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED தொட்டியத்தில் மதுரை காளியம்மனுக்கு வளையல் அலங்காரம்