×

புதுகை மருத்துவ கல்லூரி வளாகத்தில் உலக புவிநாள் தினம் மரக்கன்று நடும் பணி

புதுக்கோட்டை, ஏப்.23: புவி தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 50க்கும் மேற்பட்ட அரிய வகை மரக்கன்றுகள் நடப்பட்டு புவிக்கு இயற்கை வணக்கம் செலுத்தப்பட்டது. புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பூவதி இதுவரை கல்லூரியில் நடப்படாத அரிய வகை மரக்கன்றுகளான ஆவி, நீர்மருது, மகாகனி, வில்வம் ஆகியவை நடப்பட்டன. மருத்துவக் கல்லூரி உதவி முதல்வர் கலையரசி, கண்காணிப்பாளர் ராஜ்மோகன், நிலைய மருத்துவர் இந்திராணி மற்றும் தலைமை விடுதிகாப்பாளர் சுமதி ஆகியோர்களும் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டனர். இதுவரை இக்கல்லூரி வளாகத்தில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு முறையாக முழு ஈடுபாட்டுடன் பராமரிக்கப்பட்டு வருகிறது.

Tags : World Earth Day ,Pudukai Medical College ,
× RELATED வளமான பூமியை உருவாக்க உறுதி ஏற்போம்;...