×

டிரைவர் காயம் வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் வேட்பாளர், முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்

பெரம்பலூர்,ஏப்.23: வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் வேட்பாளர்கள், முகவர்கள் கட்டாயம் கொரோனா தொற்றுப் பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் வெங்கட பிரியா அறிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கையின் போது கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுக்கான ஆலோசனை கூட்டம், பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான  வெங்கட பிரியா தலைமை வகித்தார். கூடுதல் தேர்தல் அலுவலரான மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலரான சப்.கலெக்டர் பத்மஜா, குன்னம் சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலரான, மாவட்ட வழங்கல் அலுவலர் சங்கர், பெரம்பலூர் அரசு மருத்துவக்கல்லூரி டீன் மீனாட்சிசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் வெங்கட பிரியா பேசியதாவது: பெரம்பலூர் (தனி) வாக்கு எண்ணும் மையமான குரும்பலூர் அரசு கலைக்கல்லூரி வளாகம், குன்னம் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையமான வேப்பூர் அரசு மகளிர் கலைக்கல்லூரி வளாகம் ஆகியவற்றில், கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுற்றுக்கான வாக்கு எண்ணிக்கை விபரங்களும் சாப்ட்வேர் வசதியுடன் பதிவேற்றம் செய்து வெளியிடப்படவுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமிலிருந்து வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லும் வழித்தடங்களில் உள்ள அறைகள் அனைத்தும் தகரத் தகடுகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும். வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் வேட்பாளர்கள், முகவர்கள் கட்டாயம் கொரோனா தொற்று பரிசோதனை செய்து, அவர்களுக்கு தொற்று பாதிப்பில்லை என்பதை உறுதிப்படுத்தி இருக்க வேண்டும். தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. கொரோனா தொற்று பரவல் தடுப்பு பணிகள் விஷயத்தில் வேட்பாளர்கள், முகவர்கள், அரசியல் கட்சியினர் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். தங்கள் வேட்பாளரது வாக்குகளை குறித்து கொள்ள பேனா, நோட்டுகளை முகவர்களே கொண்டு வர வேண்டும். 14 டேபிள்களுக்கு தலா ஒரு முகவர் வீதம் 14 முகவர்கள், தபால் வாக்கு எண்ணும் டேபிளுக்கு 4 முகவர்களும், தேர்தல் நடத்தும் அலுவலர் டேபிளுக்கு ஒரு முகவர் என ஒரு வேட்பாளருக்கு 19 முகவர்களை வாக்கு எண்ணும் மையத்திற்கு நியமித்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் பெ ரம்பலூர் (தனி), குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள், திமுக முதன்மை முகவர்கள் ரவிச்சந்திரன், செல்வம், அதிமுக முதன்மை முகவர் வெண்பாவூர் தேவராஜன், முகவர் சுரேஷ் மற்றும் தேர்தல் தாசில்தார் சீனிவாசன், எஸ்பி அலுவலக தேர்தல் கட்டுப்பாட்டு அறை டிஎஸ்பி ரவிச்சந்திரன், ஊர்க்காவல் படை மண்டல தளபதி ராம்குமார் மற்றும் முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED துபாய் வெள்ளத்தில் மகன் உயிரிழந்த...