தேசிய அளவிலான சிலம்ப போட்டி மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 10 பேருக்கு தங்கம், வெள்ளி பதக்கம்

மயிலாடுதுறை, ஏப்.23: தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டி புதுடெல்லி தல்கதோரா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. சீக்கிய அமைப்பினரால் நடத்தப்பட்ட இப்போட்டியில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றதில் பிரதானமாக சிலம்பப்போட்டிகள் 5 வயது முதல் 7 வயதுவரையிலும், 8 வயது முதல் 12 வயதுவரையிலும், 13 வயது முதல் 15 வயது பிரிவினருக்கும் நடைபெற்றது. இதில் தமிழகத்திலுருந்து சீர்காழி வீரத்தமிழர் சிலம்பாட்டக்கழகம் மற்றும் காரைக்கால் குமார் மார்ஷியல் ஆர்ட்ஸ் கழகத்தை சேர்ந்த மொத்தம் 54 வீரர்கள் கலந்துகொண்டனர். சீர்காழி வீரத்தமிர் சிலம்பாட்டக் கழகத்தை சேர்ந்த 9 பேர் தங்கப்பதக்கம் மற்றும் 8 வெள்ளிப்பதக்கங்களை பெற்றனர்.

6 வயது சிறுவன் அபித்ஹரி என்பவர் சிலம்பத்தில் தங்கப்பதக்கமும், சுருள்வாள் சுழற்றலில் வெள்ளிப்பதக்கமும் பெற்றார். இந்தப்போட்டியில் வெற்றிபெற்றவர்கள் சர்வதேசப் போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்றனர். இப்போட்டியில் பங்கேற்ற 10 சிலம்பாட்ட வீரர்கள் பயிற்சியாளர் சுப்ரமணியன் தலைமையில் ஓய்வுபெற்ற சப்இன்ஸ்பெக்டர் வீரமணி ஆகியோர் நேற்று மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதாவை சந்தித்தனர். அப்போது கலெக்டர் லலிதா சிலம்பாட்ட வீரர்களை மேன்மேலும் பல வெற்றிகள் அடைய வாழ்த்தினார்.

Related Stories:

More