பள்ளப்பட்டி பேரூராட்சியில் கொரோனா தடுப்பு மருத்துவ முகாம்

அரவக்குறிச்சி, ஏப்.23: பள்ளபட்டி பேரூராட்சி பகுதியில் மருத்துவ முகாம் அமைத்து கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பள்ளபட்டி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் ஆங்காங்கே முக்கியமாக மக்கள் கூடுமிடத்தில் மருத்துவ முகாம் அமைத்து காய்ச்சல் உள்ளிட்ட பரிசோதனை செய்தல், எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள சத்து மாத்திரைகள் உள்ளிட்ட மருந்துகள் வழங்குதல், தெருத் தெருவாக கபசுர குடிநீர் வழங்கல், தெருக்கள் மற்றும் வீடுகளில் கிருமிநாசினி அடித்தல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories:

>