×

கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை

உடுமலை, ஏப்.23: உடுமலை அருகே உள்ள தேவனூர்புதூரில் நவ்வால் ஓடை செல்கிறது. மழைக்காலங்களில் இந்த ஓடையில் தண்ணீர் அதிகளவில் செல்லும். இதன் அருகே அனுமந்தபட்டினம் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.
தற்போது இந்த ஓடையில் கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்து காணப்படுகின்றன. இதனால், காடு போல காட்சி அளிக்கிறது. மழை பெய்தால் தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது. நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்படும். மேலும், புதர்களில் இருந்து விஷ ஜந்துக்கள் குடியிருப்புகளுக்குள் புகுந்துவிடுகின்றன.எனவே,  கருவேல மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.Tags :
× RELATED திருப்பூர் பவானி நகரில் வீடுகளுக்கு முன்பு தேங்கும் கழிவுநீர் குட்டை