×

நலிந்த விளையாட்டு வீரருக்கு ஓய்வூதியம்

திருப்பூர், ஏப்.23: திருப்பூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் குமரன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விளையாட்டு துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்ற, நலிந்த நிலையில் உள்ள முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்குகிறது. தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்றவர், முதல் 3 இடங்கள் பெற்றவருக்கு முன்னுரிமை உண்டு. பல்கலை, இந்திய ஒலிம்பிக் சங்கத்தினரால் அங்கீகரிக்கப்பட்ட, தேசிய விளையாட்டு சம்மேளம் நடத்திய போட்டியில் பங்கேற்றவர் விண்ணப்பிக்கலாம். இளம் வயதில் பங்கேற்று வெற்றி பெற்ற போட்டிகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். திருப்பூர் மாவட்ட முன்னாள் விளையாட்டு வீரர் யாரெனும் தகுதியுடைவராக இருப்பின், www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் மே 19-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு, 7401703515 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை