×

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

திருப்பூர், ஏப்.23: திருப்பூர் ரைசிங் சங்க தலைவர் கருணாம்பிகா ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் ஆகியோர், பின்னலாடை துறை சார்ந்த அனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைத்து, நூல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.வேகமாக செயல்பட்டால் மட்டுமே பின்னலாடை தொழில் துறையை, வீழ்சியிலிருந்து மீட்கமுடியும். இல்லையென்றால், அடுக்கடுக்கான பிரச்னைகள் உருவாகும். தொழிலாளர்களையும் தக்கவைக்க முடியாது. தொழில்துறையினர் டெல்லியில் முகாமிட்டு நூல் விலையை கட்டுப்படுத்துவது, தட்டுப்பாட்டை போக்குவது குறித்த கோரிக்கையை துறை சார்ந்த அமைச்சர்கள், அதிகாரிகளை நேரில் சந்தித்து தொழில் நெருக்கடி குறித்து அழுத்தம் தெரிவித்து, தீர்வு காண வேண்டும். இதன்மூலம் நூல் சார்ந்த பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags :
× RELATED தெலுங்குபாளையம், செல்வபுரத்தில்...