உலக புத்தக தின விழாவை கொண்டாட வேண்டுகோள்

ஊட்டி,ஏப்.23: ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23 ஆம் தேதி உலக புத்தக தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் அதிக அளவில் வாசகர்கள் மற்றும் மாணவர்களை திரட்டி நிகழ்ச்சிகளை நடத்த முடியாத நிலை உள்ளது. இதனால் உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் சார்பில் என் குடும்பத்தில் புத்தக தின விழா என்ற தலைப்பில் இன்று (23ம் தேதி) மாலை 4.30 முதல் 5.30 மணிவரை குடும்பத்துடன் நமது இல்லத்தில் தனிமனித இடைவெளியை பின்பற்றி தங்களுக்கு பிடித்த பிடித்த புத்தகத்தை வாசித்து சமுதாயத்தற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி புத்தக தினத்தை கொண்டாட வேண்டும் என மாவட்ட மைய நூலகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related Stories:

>