கொரோனா கட்டுப்பாட்டு விதிமீறிய பேக்கரிக்கு சீல்

சூலூர்,ஏப். 23: சூலூரில் கொரானா கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றாத பேக்கரிக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.சூலூர் திருத்தந்தை சாலை ரங்கநாதபுரம் பகுதியில் பேக்கரி செயல்பட்டு வருகின்றது. இந்த பேக்கரியில் கொரானா கட்டுப்பாட்டு விதிமீறி அதிக வாடிக்கையாளர்கள் குவிந்து இருப்பதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் வந்தது.அதன்பேரில் சூலூர் தாசில்தார் சிவக்குமார் உத்தரவின்பேரில் ஆர்ஐ சிவபாலன், வட்ட வழங்கல் அதிகாரி பழனிக்குமார், கண்ணம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் ஏசுமணி தலைமையிலான வருவாய்த்துறையினர் அந்த பேக்கரியில் ஆய்வு செய்தனர்.அப்போது கடையிலிருந்த பலர் முக கவசம் அணியாமலும் 100 சதவீத வாடிக்கையாளர்களுடன் கடை செயல்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து வருவாய்த்துறையினர் பேக்கரிக்கு சீல் வைத்தனர்.

Related Stories:

>