×

திமுக இளைஞர் அணி சார்பில் ஆயிரம் குடும்பங்களுக்கு முகக்கவசம், கபசுர குடிநீர்: மா.சுப்பிரமணியன் வழங்கினார்

சென்னை: சென்னை தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அன்னை சத்யா நகரில் 1000 குடும்பங்களுக்கு முகக்கவசம், சோப், பிஸ்கட் மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா ஏற்பாட்டில் நேற்று நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று சமூக இடைவெளியுடன் பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மாநில வர்த்தகர் அணி செயலாளர் காசி முத்து மாணிக்கம், பொதுக்குழு உறுப்பினர்கள் உ.துரைராஜ், எஸ்.டி.தங்கராஜ், மாவட்ட துணை செயலாளர் வாசுகி பாண்டியன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ஆர்.சசிகுமார், வட்ட செயலாளர்கள் சோ.செந்தில்குமார், மு.அன்பழகன், பிகே.குமார், பூக்கடை ஆர்.பழனிசாமி, ராஜ் செழியன், பாஸ்கர், சி.பி.தினேஷ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : DMK Youth Team ,
× RELATED திமுக இளைஞர் அணி சார்பில் ஆயிரம்...