ஈரோட்டில் ஊரடங்கை மீறிய 75பேர் மீது வழக்கு

ஈரோடு,  ஏப். 23: கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணி முதல்  அதிகாலை 4 மணி வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதில், ஈரோடு மாவட்டத்தில்  ஊரடங்கின் போது மாவட்டத்தில் உள்ள 14 செக்போஸ்ட்டுகள் மற்றும் 34 முக்கிய  இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு, வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.  விதிகளை மீறி வரும் வாகன ஓட்டிகளுக்கும், சாலையில் நடமாடுபவர்களுக்கும்,  கடை திறந்து வைத்திருந்தார் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை  எடுத்து வருகின்றனர். இந்நிலையில், 2வது நாளாக மாவட்டத்தில் ஊரடங்கினை  மீறியதாக வாகன ஓட்டிகள், கடை உரிமையாளர்கள், பொதுமக்கள் என 75 பேர் மீது  வழக்கு பதிந்து, அபராதம் விதித்தனர்.

Related Stories: