×

ஈரோட்டில் புதிதாக 225 பேருக்கு கொரோனா

ஈரோடு, ஏப். 23: ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக 225பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால், மாவட்டத்தில் மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,874ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 86 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்காரணமாக கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 16,033 பேர் குணமடைந்துள்ளனர். புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் மொத்தம் 1,689பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி இதுவரை 152பேர் உயிரிழந்துள்ளனர்.ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில், மாநகராட்சி பகுதிகளை சேர்ந்த மக்களே அதிகளவில் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதனால், ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்க கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டார். இதன்பேரில், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், தபால் அலுவலம், அடுக்குமாடி குடியிருப்புகள், சாலைகள், வீதிகளில் நேற்று கிருமி நாசினி தெளித்து நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

Tags : Erode ,
× RELATED பண்டிகை சீசன் இல்லாததால் ஈரோடு ஜவுளிச்சந்தை வெறிச்சோடியது