சிவகாசி ஒன்றிய பகுதியில் அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் காங்கிரஸ் வேட்பாளர் உறுதி

சிவகாசி, மார்ச் 24: சிவகாசி ஒன்றிய பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வசதி செய்து தரப்படும் என சிவகாசி காங்கிரஸ் வேட்பாளர் ஜி.அசோகன் தெரிவித்தார்.

சிவகாசி சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளா ஜி.அசோகன் நேற்று முன்தினம் பாறைப்பட்டி, சிவகாசிமிபுரம் காலனி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேட்பாளர் ஜி.அசோகன் பேசுகையில், ‘‘சிவகாசி ஒன்றிய பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வசதி செய்து தரப்படும். சாலைகள், சுகாதார வளாகங்கள் அமைத்து தரப்படும். கிராமப்புற மக்கள் ஏராளமானோர் பட்டாசு ஆலைகளில் பணிபுரிந்து வருகின்றனர். பட்டாசு தொழிலில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். திமுக ஆட்சி அமைந்தால் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள பல திட்டங்கள் செயல்படுத்தப்படும்’’ என்றார். திருத்தங்கல்லில் திமுக வேட்பாளர் ஜி.அசோகனை ஆதரித்து மகளிர் பேரிணி நடைபெற்றது. இப்பேரணியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். திருத்தங்கல் திமுக நகர பொறுப்பாளர் உதயசூரியன், சிவகாசி முன்னாள் நகர்மன்ற தலைவர் ஞானசேகரன், கவுன்சிலர் குருசாமி, நிர்வாகிகள் மாணிக்கம், கிருஷ்ணகுமார் உட்பட பலர் பேரணியில் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>