திருமண மண்டபத்தில் 16 பவுன் நகை திருட்டு

சிவகாசி, மார்ச் 24: திருமண மண்டபத்தில் 16 பவுன் நகை திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் ஆர்.ஆர்.நகர் கோட்டைநத்தம் கிராமத்தை சேர்ந்த சங்கரன் மகள் காயத்திரிக்கும், டி.கான்சாரபுரத்தை சேர்ந்த முருகேசன் மகள் பிரபாகரனுக்கும் கடந்த 15ம் தேதி மாரனேரி பூலாவூரணி திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது. மணமகள் தாய் மற்றும் உறவினர் மகாலட்சுமி ஆகியோரின் 16 பவுன் நகைகள் காணவில்லை. மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More
>