இரவில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தாலிச்செயின் பறிப்பு தேவதானப்பட்டி அருகே பரபரப்பு

தேவதானப்பட்டி, மார்ச் 24: தேவதானப்பட்டி அருகே, இரவில் தூங்கிய பெண்ணிடம் மர்மநபர்கள் தாலிச்செயினை பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேவதானப்பட்டியை அடுத்த காட்ரோடு அருகே, கோட்டார்பட்டி கிராமத்தில் உள்ள வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் (27). இவர், நேற்று முன்தினம் இரவு மின்சாரம் இல்லாததால் வீட்டு கதவை திறந்து வைத்து தனது மனைவி நிவேதாவுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது   இரண்டு மர்மநபர்கள் நிவேதாவின் கழுத்தில் இருந்த ஐந்தரை பவுன் தாலிச்செயினை பறித்துக் கொண்டு தப்பியோடினர். நிவேதா கூச்சலிடவே, கண்ணன் அவர்களை துரத்திச் சென்றார். ஆனால், மர்மநபர்கள் கண்ணனை கீழே தள்ளிவிட்டு தப்பிச் சென்றனர். தாலிச்செயினின் மதிப்பு ரூ.ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 500 ஆகும். இது குறித்து நிவேதா தேவதானப்பட்டி போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இரவு நேரத்தில் மின்சாரம் இல்லாதபோது மர்மநபர்கள் தாலிச்செயினை பறித்து சென்ற சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

More
>