ஜி.கே.வாசன் பிரசாரத்தால் போக்குவரத்து பாதிப்பு பொதுமக்கள் அவதி

போடி, மார்ச் 24: போடி தொகுதியில் துணை முதல்வர் ஓபிஎஸ்சை ஆதரித்து, ஜி.கே.வாசன் பிரசாரம் செய்தபோது, தேர்தல் விதிமுறைகளை மீறி, கூட்டம் கூடியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

போடி தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து, கூட்டணி கட்சி அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால், தொகுதியில் ஓபிஎஸ்சுக்கு எதிர்ப்பலை எழுந்துள்ளதால், பிரசாரம் செய்யும் இடங்களில் அதிமுக நிர்வாகிகள் பெண்களை அழைத்து வந்து கூட்டத்தை கூட்டுகின்றனர். இதனால், சில நேரங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில், துணை முதல்வர் ஓபிஎஸ்சை ஆதரித்து, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், போடியில் தேவர் சிலை அருகே பிரசாரம் செய்தார். அவருடன் தேனி தொகுதி எம்பி ரவீந்திரநாத்தும் இருந்தார். அப்போது தேவர் சிலை பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் போக்குவரத்துக்கு அவதிப்பட்டனர். தேர்தல் விதிமுறைகளை மீறி ஜி.கே.வாசனுக்கு வரவேற்பு பேனரும் வைத்திருந்தனர்.     

Related Stories:

More
>