×

காளியம்மன் கோவில் திருவிழா துவக்கம்

காளையார்கோவில், மார்ச் 24:  காளையார்கோவில் அருகில் உள்ள அரியாகுறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள வெட்டுடையார் காளியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொல்லங்குடி அருகில் அரியாகுறிச்சி கிராமத்திலுள்ள வெட்டுடையார் காளியம்மன் கோவில் திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. பின்பு அம்மனுக்கு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் இணை ஆணையர் சிவகங்கை தனபால், செயல் அலுவலர் நாகராஜன் மற்றும் கோவில் அலுவலர்கள் பொது மக்கள் கலந்து கொண்டார்கள். இரவு காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் பூதகி வாகனத்தில் சுவாமி அம்மன் திருவீதி உலா நடந்தது. வரும் 31ம் தேதி முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Tags : Kaliamman Temple Festival ,
× RELATED காளியம்மன் கோயில் திருவிழா