×

திமுக ஆட்சி அமைந்தால் மட்டுமே நீட்தேர்வை தடுக்க முடியும் பெரியகருப்பன் எம்எல்ஏ பேச்சு

திருப்புத்தூர், மார்ச் 24:  திமுக வேட்பாளர் பெரியகருப்பன் எம்எல்ஏ பொன்னாங்குடி, கள்ளிப்பட்டு, மருங்கிப்பட்டி, செவரக்கோட்டை, ஏழுலைப்பட்டி, எட்ரிப்பட்டி, பட்டனம்பட்டி, ஆலங்குடி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று தீவிர பிரசாரம் செய்தார். இதில் கல்லல் திமுக ஒன்றிய செயலாளர் குன்றக்குடி சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பிரசாரத்தில் பெரியகருப்பன் பேசியதாவது;
திமுக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே நீட் தேர்வை தடுத்து நிறத்த முடியும். வேறு யாரும் தடுக்க முடியாது.
இந்த நீட் தேர்வால் கிராமத்துப் பகுதிகளில் உள்ள மாணவர்கள் யாரும் மருத்துவர்கள் ஆக முடியாது. பாஜக நாட்டை மொத்தமாக விலைபேசி விற்று கொண்டிருக்கிறார்கள். விமான நிலையத்தை விற்று விட்டு, விமானம் வாங்கிறோம் என்கிறார்கள். எனவே தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தால் தான் மக்களுக்கு நன்மை. நிர்வாகத் திறமையற்ற அதிமுக அரசு, நமது பல்வேறு உரிமைகளை மத்திய அரசுக்கு தாரைவார்த்து கொடுத்துள்ளது.
அதே நேரத்தில் அதிமுகவின் குற்ற செயல்களுக்கு உறுதுணையாக இருக்கின்ற மத்திய பாஜக அரசுக்கு பாடம் புகட்டுகின்ற வகையிலும், தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். கல்லல் ஒன்றியப் பகுதிகளில் மட்டும் எனது தொகுதி நிதியில் இருந்து சுமார் ரூ.1 கோடி மதிப்பில் பல கிராமங்களுக்கு கலையரங்கம், நிழற்குடை, குடிநீர் உள்ளிட்ட நலத்திட்டம் ெசய்யப்பட்டுள்ளது என்றார்.

Tags : Periyakaruppan ,MLA ,
× RELATED ஊரக பகுதிகளில் அடிப்படை வசதிகளை ...