2016 சட்டமன்ற தேர்தலை விட 6 வேட்பாளர்கள் கூடுதலாக போட்டி திருப்புத்தூர் தொகுதியில் அதிகம்

சிவகங்கை, மார்ச் 24:  சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2016 சட்டமன்ற தேர்தலைவிட தற்போதைய சட்டமன்ற தேர்தலில் கூடுதலாக 6 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஏப்.6ல் நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலில் சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் இ.கம்யூனிஸ்ட் கட்சி, அதிமுக, அமமுக, மநீம, நாதக சார்பில் மல்லிகா மற்றும் சுயேட்சைகள் உள்பட 15 பேர் களத்தில் உள்ளனர். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் 16பேர் போட்டியிட்ட நிலையில் தற்போது ஒரு வேட்பாளர் குறைந்துள்ளார். காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், அதிமுக கூட்டணியில் பிஜேபி, அமுமுக, மநீம, நாதக, மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட 13 பேர் தற்போதைய சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றனர். கடந்த 2016சட்டமன்ற தேர்தலில் 15பேர் போட்டியிட்டனர். தற்போது 2 வேட்பாளர்கள் அதிகரித்துள்ளனர். திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக, அதிமுக, அமமுக, மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட 26பேர் தற்போது போட்டியிடுகின்றனர். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் 18பேர் போட்டியிட்ட நிலையில் தற்போதைய தேர்தலில் 8 வேட்பாளர்கள் அதிகரித்துள்ளனர். மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட திமுக, அதிமுக, அமமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட 13 பேர் தற்போதைய தேர்தலில் களத்தில் உள்ளனர். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் 12 பேர் போட்டியிட்டனர். தற்போதைய தேர்தலில் ஒரு வேட்பாளர் அதிகரித்துள்ளார். ஒட்டு மொத்தமாக நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த 2016 சட்டமன்ற தேர்தலைவிட தற்போதைய தேர்தலில் 6 வேட்பாளர்கள் கூடுதலாக போட்டியிடுகின்றனர். கடந்த தேர்தலிலும், தற்போதைய தேர்தலிலும் மற்ற தொகுதிகளை விட திருப்பத்தூர் தொகுதியிலேயே அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

Related Stories: