×

கீழக்கரை பகுதிக்கு பாதாள சாக்கடை மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு மக்கள் வரவேற்பு

கீழக்கரை, மார்ச் 24:  ராமநாதபுரம் மாவட்டத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கீழக்கரைக்கு பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்படும் என அறிவிப்பு செய்தார். இவரின் அறிவிப்புக்கு பொதுமக்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கீழக்கரை நகர் செயலாளர் பசீர் கூறியதாவது: அ.தி.மு.க. அரசு பாதாள சாக்கடை திட்டத்தை கவனத்தில் எடுத்து கொள்ளவில்லை. இந்நிலையில் தி.மு.க. தலைவர் கீழக்கரை நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்படும் என்ற அறிவிப்பு மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : MK Stalin ,
× RELATED உயர்கல்வி, தொழிற்கல்வி,...