×

100 சதவீதம் வாக்களிக்க வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு

ராமநாதபுரம், மார்ச் 24:  ராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், நடந்த வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். பரமக்குடி, திருவாடானை சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் பார்வையாளர் சவுரப் துபே முன்னிலை வகித்தார். இதில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் தேர்தல் நடவடிக்கைகளில் பங்கேற்றல், முதன்முறை வாக்காளர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து தரப்பு வாக்காளர்களையும் தேர்தல் நடவடிக்கைகளில் ஊக்குவித்தல், 100 சதவித வாக்குப்பதிவு, நேர்மையாக வாக்களித்தல் உள்ளிட்ட நோக்கங்களை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 25க்கும்  மேற்பட்டோர் பங்கேற்று உறுதிமொழி எடுத்தனர்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்து மாற்றுத்திறனாளிகள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

Tags :
× RELATED தமிழ்நாட்டில் 15 நாட்களில் 100சதவிகிதம்...