×

கிராமங்களில் குடிநீர் வசதி மேம்படுத்தப்படும் அமமுக வேட்பாளர் உறுதி

தொண்டி, மார்ச் 24:  திருவாடானை சட்டமன்ற தொகுதியின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளராக வ.துந.ஆனந்த் போட்டியிடுகிறார். இவர் கிராமங்கள் தோறும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். கிராமங்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி சாலை வசதி மேம்படுத்தப்படும் என்று நேற்று உறுதி அளித்தார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் திருவாடானை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஆனந்த் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். கிராமங்கள் தோறும் இவர் நன்கு அறிமுகமானவர் என்பதால், வாக்காளர்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது. நேற்று புல்லூர், பனஞ்சாயல் புலியூர் ப.தனக்குடி, ஓரியூர், புதுவயல், எஸ்பி.பட்டினம், தீர்த்தாண்டதானம், மருதவயல், மாணவ நகரி, பாசிப்பட்டினம் வட்டம் கொடிபங்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மக்களின் அடிப்படை தேவையான குடிதண்ணீர் நிரந்தரமாகவும் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கிராமங்களில் சாலைகள் மேம்படுத்தப்படும். மின்சாரம் தடையில்லாமல் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றும் பொதுமக்களிடம் உறுதியளித்தார்.

Tags :
× RELATED திருவாரூர் பைபாஸ் சாலை அருகே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்த நூலக சாலை