×

பித்தளை பாத்திரங்கள் பறிமுதல்

பரமக்குடி, மார்ச் 24:   ‘பரமக்குடி அருகே மும்மடிசாத்தானை சேர்ந்தவர் சரவணன். இவர் பித்தளை பாத்திரங்கள் வியாபாரம் செய்து வருகிறார். வியாபாரம் செய்வதற்காக நயினார்கோவில் வழியாக ராமநாதபுரம் செல்வதற்கு சரக்கு வாகனத்தில் பித்தளை பாத்திரங்களை கொண்டு சென்றுள்ளார். அப்போது அண்டக்குடி விலக்கு என்ற இடத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையிட்டபோது உரிய ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது. இதனை எடுத்து அவரிடம் இருந்து 56 பித்தளை பானை, 6 மரக்கா, 23 அண்டா என ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள பித்தளை பாத்திரங்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED திருவாரூர் பைபாஸ் சாலை அருகே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்த நூலக சாலை