காந்திய சிந்தனை கருத்தரங்கம்

மதுரை, மார்ச் 24: மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் கீழ் செயல்பட்டு வரும் காந்திய கல்வி, ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் காந்திய சிந்தனை கருத்தரங்கம் நடந்தது. வெள்ளைச்சாமி நாடார் கல்வியியல் கல்லூரி முதல்வர் தேன்மொழி தலைமை வகித்தார். காந்தி அருங்காட்சியக இயக்குனர் நந்தாராவ், பேராசிரியர்கள் மாரிச்செல்வம், நடராஜன், வெங்கடேஷ்வரன், ஜெயக்குமார், கிருஷ்ண ராஜ், ஜெயச்சந்திரன், எழுத்தாளர் சுவாமிநாதன் ஆகியோர் பேசினர். இவர்கள் காந்தியடிகளின் சர்வோதயம், அகிம்சை, கல்வி, சமயம், பொருளாதாரம், அரசியல் குறித்து பல்வேறு தலைப்புகளில் கருத்துரை வழங்கினர். காந்திய கல்வி நிறுவன முதல்வர் தேவதாஸ் வரவேற்றார். பேராசிரியர் தேவ ஆசிர்வாதம் நன்றி கூறினார்.

Related Stories:

More