இதுவரை ரூ.1 கோடி தேங்காய் வர்த்தகம்

மதுரை, மார்ச் 24: தமிழ்நாடு வேளாண் விற்பனை, வணிகத்துறையின் மதுரை விற்பனை குழுவிற்கு உட்பட்ட வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒவ்வொரு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஏலம் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த ஏலத்தில் 24 விவசாயிகளின் 70,864 தேங்காய்கள் 24 குவியலாக ஏலம் விடப்பட்டன.

10 வியாபாரிகள் பங்கு பெற்று சராசரியாக ரூ 10.03க்கு ஒரு தேங்காய் ஏலம் போனது. ரூ.6.37 லட்சத்திற்கு தேங்காய் வர்த்தகம் நடந்தது. இதுவரை வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலம் ரூ.1 கோடிக்கு வர்த்தகம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More