×

290 நுண் பார்வையாளர்கள் 7 தொகுதிகளுக்கு நியமனம்

திண்டுக்கல், மார்ச் 24: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான பொது பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. இதில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்தும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்கும் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புகுழு, வீடியோ பார்வைக்குழு, வீடியோ கூர்ந்தாய்வுக்குழு, கணக்குக்குழு உள்ளது.  இந்த குழுக்கள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்டு, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் மூலம் கண்காணிக்கப்படுகிறது. பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு, அந்த வாக்குச்சாவடிகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் பதற்றமான மற்றும் கண்காணிக்க வேண்டிய வாக்குச் சாவடிகளுக்கு 290 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்பாடு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. அனைத்து நுண்பார்வையாளர்களும் தேர்தல் அன்று தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் செல்ல வேண்டும். மாதிரி தேர்தல் நடத்த வேண்டும். அதன்பின் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னர் மாதிரி தேர்தல் வாக்குப்பதிவுகள் அழிக்கப்பட்டதை உறுதி செய்ய வேண்டும். தேர்தல் ஆணையம் கூறியுள்ள ஆவணங்களை வாக்காளர்கள் கொண்டு வந்து வாக்குப்பதிவு செய்கிறார்களா என உறுதிப்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ