×

திமுகவினர் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முக கவசம் வழங்க வேண்டும்

நாகர்கோவில், ஏப்.23: குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கின்ற இந்த சூழ்நிலையில், கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. குமரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றின் காரணமாக 19 ஆயிரம் பேர் பாதிப்படைந்துள்ளனர்.  ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, 9 அரசு மருத்துவமனைகள், 47 ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனை மையங்கள் என 150 மையங்களில் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. அரசின் அறிவுரையை ஏற்று தடுப்பூசி போட சென்றால் மருந்து இல்லையென்று திருப்பி அனுப்பக்கூடிய அவல நிலை உள்ளது. இதனால்  பல மையங்கள் மூடப்பட்டுள்ளது.  இப்படிப்பட்ட சூழ்நிலையில்  நோய் பரவல் அதிகரிக்க வாய்ப்பாக உள்ளது.எனவே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனா பாதிப்பின் 2 வது அலையில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.  குமரி மாவட்ட மக்களை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது என்பதை   உணர்ந்து திமுகவினர் ஒன்றியம், மாநகரம், நகரம், பேரூர், ஊராட்சி, கிளை கழகங்களில் உள்ள திமுகவினர் கபசுர குடிநீர், முக கவசம் உள்ளிட்டவைகளையும், தனி மனித இடைவெளியையும் கடைபிடித்து, பொதுமக்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று குமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : DMK ,
× RELATED தூத்துக்குடி தொகுதியில் மீண்டும்...