×

மாரடைப்பு ஏற்பட்டது குமரியில் கொரோனாவிற்கு 3 பெண்கள் பலி

நாகர்கோவில், ஏப்.23: குமரியில்  கொரோனா பாதிக்கப்பட்ட  2 பெண்கள் மாரடைப்பு ஏற்பட்டு பலியாகினர். குமரியில் கொரோனா தொற்று காரணமாக இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வடசேரி கனகமூலம்  புதுத்தெருவை சேர்ந்த 54 வயது பெண் கடந்த 15ம்தேதி காய்ச்சல் மற்றும் தொண்டை வலி காரணமாக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். அவருக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து,  அவருக்கு ரெம்ெடசிவிர் உள்ளிட்ட மருந்துகள் அளிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதை அடுத்து வென்டிலேட்டர்  பொருத்தப்பட்டது. நேற்று காலை 6 மணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. தீவிர சிகிச்சை அளித்தும்  மரணமடைந்தார். குழித்துறை பெருமாள் தெருவை சேர்ந்த 78 வயது மூதாட்டிக்கு கடந்த 19ம் தேதி வாந்தி மற்றும் வயிற்றுபோக்கு ஏற்பட்டது. மூச்சு விடவும் சிரமம் ஏற்பட்டதை அடுத்து, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு தொற்று உறுதியானது. இதனையடுத்து ஆசாரிபள்ளம் மருத்துவகல்லூரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று  அதிகாலை 2.05 மணிக்கு மாரடைப்பு எற்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.இதுபோல் தனியார் மருத்துவமனையில் சிகிச்ைச பெற்று வந்த நெல்லை மாவட்டம் ராதாபுரத்தை சேர்ந்த 60 வயது மூதாட்டியும் நேற்று காலை பலியானார். இதனை தொடர்ந்து குமரியில் கொரோனாவிற்கு மொத்த பலி எண்ணிக்கை 364 அக உயர்ந்துள்ளது.

இதுதவிர நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று  காலை 8 மணி வரை நாகர்கோவில் மாநகராட்சியில் நடைபெற்ற சோதனையில் 62 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் நடைபெற்ற சோதனையில் அகஸ்தீசுவரம் வட்டத்தில் 14 பேருக்கும், கிள்ளியூரில் 7 மேல்புறம் 8, முஞ்சிறை 14, ராஜாக்கமங்கலம் 31, திருவட்டாறு 5, தோவாளை 17, தக்கலை வட்டத்தில் 4 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதுதவிர நெல்லையில் இருந்து வந்த 1, கேரளாவில் இருந்த 2 பேர், தென்காசி 1,  சென்னை 1, தேனியிலிருந்து வந்த ஒருவர் என மொத்தம் 185 பேருக்கு ஒரே நாளில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்த பாதிப்பு 19,108 ஆக உயர்ந்துள்ளது.

Tags : Kumari ,
× RELATED சாத்தூர் அருகே புல்வாய்ப்பட்டியில்...