×

தங்கம் அரிப்பு மண் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

நாமக்கல், ஏப். 23: நாமக்கல் அடுத்த வகுரம்பட்டியில் நேற்று முன்தினம் இரவு ஆர்டிஓ கோட்டைக்குமார் தலைமையில் வருவாய்த்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கம் அரிப்பு மண்ணை பிளாஸ்டிக் தொட்டிகளில் நிரப்பி கொண்டு செல்வது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த 2 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து ஆர்டிஓ கோட்டைகுமார் விசாரித்து வருகிறார்.

Tags :
× RELATED அரியலூர் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் 2 லாரிகளில் குக்கர் பறிமுதல்